கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் - பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது:
மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம், 10 அடி ஆழம், 23 அடி ஆழம் என 3 அடுக்குகளாக பல எலும்பு கூடுகள் கிடைத்திருக்கின்றன. 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடு கிடைத்தது. ஒன்று, ஆண். இன்னொன்று பெண். இறக்கும் நேரத்தில்கூட இருவரும் ஒருவரை ஒருவர் ஆசையோடு பார்த்திருக்கின்றனர். காதலனின் தலைகூட இறந்த பிறகுதான் அந்த பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது மண்டை ஓடு இருந்த விதம் மூலம் தெரிகிறது.

No comments:
Post a Comment