HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 24 October 2011

மாணவி பலி....ஆற்றில் விழுந்து

சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள மார்க் கிரிகோரியஸ் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் 46 பேர் நேபாள நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, தலைநகர் காட்மாண்டில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பொகோரோ என்ற மலைவாசஸ்தலத்துக்கு சென்றனர்.


மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்து பார்த்து விட்டு, அவர்கள் திரிசூலி ஆற்றின் மேல் இரு பாறைகளை இணைத்து கட்டப்பட்டு இருந்த கயிற்று தொங்கு பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்தனர்.


அப்போது, அந்த தொங்கு பாலத்தின் ஒரு ஓரத்தில் நின்று அவர்கள் மிகவும் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வெளிமாநில மாணவ, மாணவிகளும் அந்த பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.


அவர்களின் அதிக எடையை தாங்காமல், திடீரென அந்த கயிற்றுப்பாலம் அறுந்து விழுந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் அலறி, கூச்சலிட்டபடி ஆற்றில் விழுந்தனர். அவர்கள் ஆற்று தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.


அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டு அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளும், அக்கம்பக்கம் இருந்தவர்களும் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


ஆனாலும், பிளாரன்ஸ் என்ற மாணவியை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர் எம்.எஸ்.டபிள்ழூ என்ற முதுநிலை வகுப்பில் 2 ம் ஆண்டு படித்து வந்தார்.


பேராசிரியர் சம்போ ரனாய், மாணவர்கள் ரமேஷ், சிஜோ டேவிஸ் உள்பட 12 பேர் மயங்கிய நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் பரத்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


ஹமீதா என்ற மாணவியை ஆற்று வெள்ளம் அடித்துச்சென்று விட்டது. அவரையும், மேலும் யாராவது ஆற்றில் அடித்துச்செல்லபட்டு உள்ளனரா என்றும் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.


இந்த விபத்து குறித்து சென்னையில் உள்ள கல்லூரிக்கும், மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பரத்பூருக்கு விரைந்து உள்ளனர்.


விபத்தில் பலியான மாணவி பிளாரன்ஸ் உடலை கொண்டு வரவும், காயமடைந்தவர்களை அழைத்து வரவும் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர் பிரகாசம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment