....ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். திகார் ஜெயிலில் இருக்கும் அவர்களது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். அங்கும் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
கடந்த 22-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
இதேபோல் குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகல்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment