HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 25 October 2011

டிராபிக் எஸ்ஐ கைது....ரூ.1,000 லஞ்சம்...

ஆம்னி பஸ்களை நிறுத்த ரூ.1,000 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து எஸ்.ஐ.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரன் என்பவர் ராஜ் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். விமான நிலையம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இந்த நிறுவன பஸ்கள் பயணி களை ஏற்றிச்செல்வது வழக் கம். மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து போலீசார், சோதனை என்ற பெயரில் பேருந்தை செல்ல விடாமல் பல மணி நேரம் அலைக்கழித்தனர். 

இதையடுத்து போக்குவரத்து எஸ்ஐ செல்வமூர்த்தி, ராஜ் டிராவல்ஸ் உரிமை யாளர் ராஜேந்திரனிடம் தினமும் ரூ.200 அல்லது மாதம் னீ2,000 தர வேண்டும். தராவிட்டால் வழக்கு பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டினார். ராஜேந்திரன் ரூ.1,000 தருவதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார். 

செல்வமூர்த்தி, பல்லாவரம் அரைவா சிக்னல் அருகே ராஜேந்திரனை வந்து பணம் தரும்படி கூறினர்.ராஜேந்திரன் அங்கு சென்று பணம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுதாகர், இன்ஸ்பெக்டர் விஸ்வேஸ்ரய்யா ஆகியோர் செல்வமூர்த்தியை கைது செய்தனர்.

No comments:

Post a Comment