சென்னையில் பல இடங்களுக்கு மாநகர பஸ்கள் முழுமையாக இயக்க முடிவதில்லை. குறுகிய சந்து, தெருக்களில் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதால் அது போன்ற பகுதிகளை அடையாளம் காணப்பட்டு மினி பஸ்கள் விடப்படுகின்றன.
இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி மாநகர போக்குவரத்து கழகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
முதல் கட்டமாக 100 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை எந்தெந்த இடங்கள் என குறிப்பிடப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் 100 வழித்தடங்களில் 200 மினி பஸ்கள் விரைவில் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
No comments:
Post a Comment