வயிற்று கோளாறுகள் வராது. முதுகுவலி நீங்கும். வாயு கோளாறு அகலும். ஹிரண்யா, மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். தொடை, முழங்கால், பாதப்பகதிகள் நன்கு வலுப்படும். தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும். இருசக்கர வாகனம், காரில் பயணிப் போர், அலுவலகத்தில் உட்கார்ந்து பணியாற்றுவோருக்கு உகந்த ஆசனமிது! விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு உள்ளங்கை தரையில் படுமாறு வைக்கவும். அதற்குபிறகு இயல்பான சுவாசத்தில், வலதுகாலை இடுப்பிலிருந்து செங்குத்தாக மேலே தூக்குங்கள். இரு கைகளால் மேலிருக்கும் வலது கால் கட்டைவிரலை பிடித்து உடலை நிமிர்த்தவும். இத்துடன் முகத்தால் வலது முழங்காலை தொடவும் முயற்சியுங்கள். அதே சமயத்தில் இடதுகால் மடங்காமல் தரையில் பதிந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, இதேபோல இடதுகாலை மாற்றி செய்யவும்.
No comments:
Post a Comment