HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday, 30 October 2011

துப்பாக்கி சூட்டில் 80 பேர் பரிதாப பலி !

சூடானில் போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 15 பேர் உள்பட 80 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்க நாடான சூடானில் முஸ்லிம்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் இடையில் தொடர்ந்து இன மோதல் நடந்து வருகிறது. வடக்கு சூடானில் உள்ளவர்களுக்கும் தெற்கு சூடானில் உள்ளவர்களுக்கும்  மோதல் உள்ளது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து Ôதெற்கு சூடான் விடுதலை படைÕ (எஸ்எஸ்எல்ஏ) என்ற பெயரில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில் தெற்கு சூடானில் உள்ள மயோம் நகருக்குள் எஸ்எஸ்எல்ஏ போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கில் திடீரென புகுந்தனர். அவர்களுக்கும் சூடான் ராணுவத்துக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 60 போராட்டக்காரர்கள் உள்பட 80 பேர் பலியாயினர் என்று சூடான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கிடியோன் காட்பன் தோர் நேற்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ÔÔஉள்ளூர் தீவிரவாதிகளுக்கு உதவ எஸ்எஸ்எல்ஏ போராட்டக்காரர்கள் திடீரென நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுÕÕ என்றார்.

No comments:

Post a Comment