மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது. அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். உடலில் சேரும் கழிவு பொருட்களை எடுத்து வரும் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அதில் இருக்கும் கழிவுநீரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீர்ப்பகுதியின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, எலும்புகளை வலிமைபடுத்துவது, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை தூண்டுவது, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது என பல வேலைகளை சிறுநீரகம் செய்கிறது.
இந்தியாவில் சிறுநீரக நோய்களினால் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழக்கிறது. ஆனால், உறவினர்கள் மற்றும் மற்றவர்களின் மூலமாக சுமார் 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. இதனால், சிறுநீரகம் கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment