பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரைப் பாதையில், பைப் குண்டு வைக்கப்பட்டு இருந்தது பற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்த அ.தி.மு.க.,வை சேர்ந்த இருவருக்கு, முதல்வர் ஜெயலலிதா 50,000 ரூபாய் பரிசு கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து, அ.தி.மு.க., தலைமைக் கழகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம், ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., ஆரம்ப கால உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு, 14வது வார்டு கவுன்சிலர் செல்வம் ஆகியோர், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரைப் பாதையில், பைப் குண்டு வைக்கப்பட்டிருந்ததை, உரிய நேரத்தில் போலீசுக்கு தெரிவித்து, பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்த்தனர்.இவர்களின் செயலைப் பாராட்டி, இருவரையும் சென்னையில் தனது இல்லத்துக்கு வரவழைத்து, பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, இருவருக்கும் தலா 50,000 ரூபாய் பரிசையும், முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க, அவர்கள் இருவரும் உறுதுணையாக இருந்ததற்கு, நன்றியையும் முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment