HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday, 30 October 2011

விரைவில் அதிரடி மாற்றம்...தமிழக போலீசில்



கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயல்பட்ட சில அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகர்களுக்கு திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள், மீண்டும் வரவழைக்கப்பட்டு தகுதியான பணியில் நியமிக்கப்பட்டனர்.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்ற அன்றே கமிஷனர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் வரையில் அனைவருமே மாற்றப்பட்டனர். புறநகரிலும் மாற்றம் நடந்தது. இந்நிலையில், இரண்டு போலீசும் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர் போலீஸ் உருவாக்கப்பட்டு, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியிடங்களும் உருவாக்கப்பட்டு அதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணை கமிஷனர் பதவியிடம் உருவாக்கப்பட்டு, அதில் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு, தற்போது உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.குற்றம் மற்றும் தலைமையிடம் இரண்டிற்கும் தனித்தனி கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment