திருச்சி: போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற நபர், தீபாவளி கொண்டாட ஊர் திரும்பிய போது திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செட்டியார் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (36). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முனியாண்டி என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்று வேலை செய்தார். நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டார்.
ஏர்ஏசியா விமானம் மூலம் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது முத்துகுமாரின் பாஸ்போர்ட்டை, குடியுரிமை அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தனர். அதில் முத்துகுமார் போலி பெயரில் வெளிநாடு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முனியாண்டி என்ற பெயரில் இருந்த போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்ற குற்றத்திற்காக முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அதன்பின் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment