125 நகராட்சிகளில் 89 இடங்களை அதிமுகவும், 23 நகராட்சிகளை திமுகவும் பிடித்துள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என்று மொத்தம் 1,12,759 பேர் இன்று பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்கிறார். அவருடன் 200 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் விஐபிக்கள் பங்கேற்றனர். இதையொட்டி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி மன்ற கூடத்தில் 200 கவுன்சிலர்கள் அமரும் வகையில் இருக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment