தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுசுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த “வாமணன்” படத்தை டைரக்டு செய்தவர். ரிச்சாவும் ஜீவாவுடன் நடிக்க முதலில் சம்மதித்ததாக கூறப்படுகிறது. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றாராம்.
No comments:
Post a Comment