வெடிப்பாக திரிகிற மாணவன் கிரி. அவன் ஒழுங்காக படிக்க வேண்டும் என்பதற்காக அவனது தாய், தனது தூரத்து உறவான சம்பத் வீட்டில் கொண்டு விடுகிறார். கிரியின் அப்பா ஜாதிக்காக உயிரைக் கொடுத்தவர் என்பதால் அவர் மகன் மீது ஜாதிக்காரர்களுக்கு பாசம். சம்பத் ஜாதி வெறி பிடித்தவர். ஏழை விவசாயிகளிடம் மலிவான விலைக்கு காப்பி கொட்டை வாங்கி அதிக விலைக்கு விற்கும் ஏஜென்ட். அவரை எதிர்த்து கேட்க ஊரில் ஆளே இல்லை. ஜாதிப் பற்றுள்ள கிரிக்கு சம்பத் ரோல் மாடலாக தெரிகிறார். ஆனால் அவருக்கும் அவருடன் படிக்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த அஸ்வதாவுக்குமான காதல், கிரிக்குள் இருக்கும் ஜாதி உணர்வை கரைய வைக்கிறது. டீச்சர் மோனிகாவும் கிரியிடம் இருக்கும் ஜாதி உணர்வை மாற்றுகிறார். இந்நிலையில் கிரி காதலிக்கும் அஸ்வதாவின் வாழ்க்கையை சம்பத் நாசம் செய்வதோடு, மோனிகாவையும் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். ரோல் மாடலாக இருந்த சம்பத், கிரிக்கு வில்லனாகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
ஜாதிக் கொடுமையை சமீபத்தில் இத்தனை அழுத்தமாக, ஆழமாக எந்தப் படமும் சொல்லவில்லை. கிராமங்களில் இன்னும் புரையோடிப் போயிருக்கும் ஜாதி வெறிக்கு பள்ளி மானவன், சின்ன பாடம் நடத்திவிட்டு போவதுதான் படம். குறும்பும் கோபமும் மிக்க போக்கிரி மாணவன் கேரக்டருக்கு கிரி பொரு த்தமாக இருக்கிறார். அஸ்வதாவுடன் ஜாதியை தாண்டி காதல் அரும்பும் காட்சிகளில் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘நம்ம ஜாதி ரத்தம், உனக்கு நல்லா ஓடுதுடா’ என்று சம்பத் தூண்டுவது, விளைபொருளுக்கு கூலியை உயர்த்திக் கேட்டதற்காக, தாழ்த்தப்பட்ட இளைஞனை கொடூரமாக கொடுமைப் படுத்துவது, வறுமையில் வாடும் பெண்களை தனது வலையில் வீழ்த்தும் பெண் ஏஜென்ட் என்று ஜாதி கொடுமைகளை அதிர்ச்சியூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பள்ளி டீச்சர் கேரக்டரில் மோனிகா யதார்த்தமாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நெருக்கம் அதிகம். சம்பத்துடனான திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த அவர் ஆடும் சாமியாட்ட நாடகமும், அதில் மோனிகாவின் நடிப்பும் பிரமாதம். தங்கம் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் அஸ்வதா. ஜாதி வெறிபிடித்த வில்லன் கேரக்டரில் சம்பத் தனி ஆளாக நின்று விளையாடுகிறார். தனது ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஜாதியை முன்னிலைப்படுத்தும் குரூரத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இசாக் தாமஸின் இசையில் மலையாள வாசனை அடித்தாலும் பாடல்கள் இனிமை. பிரேம்குமாரின் கேமரா இயற்கை அழகை அள்ளித் தருகிறது. குறிப்பாக நிலவு வெளிச்சத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அவரது உழைப்பு தெரிகிறது.

கூலி உயர்வுக்காக சம்பத்தை எதிர்த்த தாழ்த்தப்பட்ட இளைஞன், அவன் தங்கை சம்பத்துக்கு விருந்தாவதை, கண்டு கொள்ளாமல் இருப்பதையும், அஸ்விதாவும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சம்பத்துக்கு விருந்தாவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மோனிகாவை சம்பத்துக்கு திருமணம் செய்து கொடுப்பதை ஆரம்பத்தில் எதிர்க்கும் அவளது அண்ணன் பின்பு அது பற்றி கண்டு கொள்ளாமல் போவது ஏன்? எல்லைக் கோவில் எபிசோடிலும் லாஜிக் மிஸ்சிங். என்றாலும் வர்ணத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை சொல்லும் இந்த ‘மாணவன் கிரி ஸ்பெஷல்தான்.
No comments:
Post a Comment