HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 20 October 2011

மெட்ரோ ரயில்..


            பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொல்கத்தா, தில்லிக்கு அடுத்தபடியாக மெட்ரோ ரயில் சேவையைப் பெறும் மூன்றாவது நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெற்றுள்ளது.
பெங்களூரின் வர்த்தக மையத்தை மாநகரின் கிழக்குப் பகுதியுடன் இணைக்கும்வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கமல்நாத், கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா மற்றும் பாஜக தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் இந்த மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்தனர்.
இந்த தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அனந்தகுமார், பயோகான் நிர்வாக இயக்குநர் கிரண் மஜும்தார், இன்போசிஸ் நிறுவனர் சுதா மூர்த்தி மற்றும் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர்.கோபிநாத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் இன்று மாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையைப் பெறலாம். இந்த மெட்ரோ வழித்தடத்தில் 6 நிலையங்கள் உள்ளன. ஒட்டுமொத்த பயண நேரம் 14 நிமிடங்களாகும்.

No comments:

Post a Comment