கொழும்பு : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 400 முன்னாள் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய, இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2009ல் நடந்த விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின், ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் பலர் தற்போது விடுவிக்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இலங்கை அரசு, 400 முன்னாள் விடுதலைப் புலிகளை விடுவிக்கவுள்ளது. இதுகுறித்து, நேற்று மறுவாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர கூறுகையில், "இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 400 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்' என்றார். முன்னாள் விடுதலைப் புலி வீரர்களை விடுவித்து, சமூகத்தில் அவர்களை இணைக்கும் மறுவாழ்வுத் திட்டத்துக்கு, இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி இறுதித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. hai friend its very good news for all indians
No comments:
Post a Comment