நடிகர் அஜீத்குமார் ‘பில்லா 2' படத்துக்காக சண்டை காட்சியில் நடித்த போது பாட்டில் துண்டுகள் உடைந்து கையை கிழித்தது. ‘பில்லா படத்தின் 2வது பாகமாக உருவாகிறது ‘பில்லா 2'. அஜீத் நடிக்கிறார். சக்ரி டைரக்டு செய்கிறார். இதன் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது. நேற்று இப்படத்துக்காக வில்லன் கூட்டத்துடன் அஜீத் நடித்த சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காட்சியில் ஸ்டன்ட் நடிகர் ஒருவரின் தலையில் பாட்டிலால் தாக்குவது போல் அஜீத் நடித்த போது பாட்டில் துண்டுகள் சிதறின. இதில் அவரது கைகளில் பாட்டில் துண்டுகள் குத்தி கிழித்து, குபு குபுவென ரத்தம் கொட்டியது. உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதுபற்றி உதவி இயக்குனர் ஒருவர் கூறும்போது, ‘சண்டை காட்சியில் அஜீத் ஆக்ரோஷமாக நடித்தார். அப்போது பாட்டில் துண்டுகள் உடைந்து அவரது கையை கிழித்தன. இதனால் ஷூட்டிங் பாதிக்கவில்லை. சில மணி நேர ஓய்வுக்கு பிறகு அவர் ஷூட்டிங்கில் பங்கேற்றார் என்றார்.
No comments:
Post a Comment