ஹரித்துவார் அருகே ஹர்கிபவுரி என்ற மலைப் பகுதியில் சத்பூஞ்ச் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் நேற்று முன்தினம் இந்த ஆசிரமத்தின் நிறுவனர் ஆச்சார்யா ஸ்ரீராம் சர்மாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது சந்தீப்காட் என்ற இடத்தில் அக்னி யாகம் நடத்தப்பட்டது. அதைப் பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலியானார்கள். நேற்று மேலும் 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை ஹரித்துவார் துணை கோட்டாட்சியர் ஹர்பீர்சிங் தெரிவித்தார். இந்த விழாக் கொண்டாட்டங்கள் கடந்த 6 ம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த துயரச் சம்பவத்தை அடுத்து இந்த விழா கொண்டாட்டங்களை உடனடியாக முடித்துக்கொள்ளுமாறு ஆசிரம நிர்வாகிகளை முதல்வர் பி.சி.கந்தூரி கேட்டுக்கொண்டார். இதையடுத்து விழாக் கொண்டாட்டங்கள் முடித்துக்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் வி.சி.கந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
labels: ஹரித்துவார்,முதல்வர்,விசாரணை.
labels: ஹரித்துவார்,முதல்வர்,விசாரணை.
No comments:
Post a Comment