2011 ம் ஆண்டு உலக அழகிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. இதில் உலகம் முழுவதிதலிருந்தும் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 150 நாடுகளில் டி.வி.வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த, இவியன் லூனாசோல் சர்கோ என்ற 21 வயது பட்டதாரி மாணவி 2011ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக கடைசி சுற்றுப்போட்டியில், தென்கொரியா, வெனிசுலா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், போர்டாரிகோ, தென்ஆப்ரிகா, ஸ்காட்லாந்து என 7 நாட்டு அழகிகள் இடம் பெற்றனர். கடைசியாக வெனிசுலா நாட்டின் இவியன் லூனாசோல் சர்கோ, உலக அழகி பட்டம் பெற்றார். அவருக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் மும்பை மாடல் அழகி கனீஷ்தா தன்ஹார், முதல் 15 இடங்களில் கூட முன்னேறவில்லை. கடந்த 2000 ம் ஆண்டு உலக அழகியாக பாலிவுட் நடிகை பிரியங்கோ சோப்ரா பெற்றார். அதன் பிறகு யாரும் உலக அழகி பட்டம் பெறவில்லை.
labels:kanishtha,priyanka sopra,
No comments:
Post a Comment