HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 15 November 2011

தாஜ் மஹால் அழகு கேட்டு போகும்!!!!

 தாஜ்மகால் பராமரிப்பு குறித்து உ.பி., அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட கேள்வி எழுப்பியுள்ளது. யமுனை நதி மாசுபடிந்து வருவதால் தாஜ்மகாலின் அழகு பாழ்பட்டு வருவதாக டெய்லிமெயில் பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டிருந்தது.
 இது குறித்து சுப்ரீம் கோர்ட் தொல்லியல்துறை மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இது குறித்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி டி.கே.ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில்தொல்லியல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அதில் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை மேற்‌கொள்ளப்பட்டு வருவதாகவும், மாநில அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாயாவதி அரசுக்கு கண்டணம் தெரிவித்தது. தாஜ்மகால் உலக அதியங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகின்ற போதிலும் அவை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அவற்றை பராமரிக்க மாநில அரசு கவனத்தில் கொள்ளாதது கண்டனத்திற்குரியது என சுப்ரீ்ம்கோர்ட் தெரிவித்துள்ளது.


labels:taj mahal,மாயாவதி 

No comments:

Post a Comment