சுரண்டை பேரூராட்சிக்கு சென்ற அவர், பின்னர் அந்தப் பகுதி மக்கள் தந்த வரவேற்பை பெற்றதோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அதன் பக்கம் உள்ள இடையர் தவனை பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்கேசிறிது நேரம் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சரத்குமாரை, கிராம மக்கள் தங்களது ஆலயத்துக்கு வருமாறு அழைத்தனர்.
சரத்குமார் ஆலயத்துக்கு சென்றபோது, ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்ததோடு, சுனோஷ் ஸ்பெரேயர் என்ற வரவேற்பு வெடியை வெடித்தனர். அதிலிருந்து கிளிம்பிய கில்ட் பேப்பர்கள், சரத்குமாரின் கண்ணில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தியது.
உடனடியாக அவர் சுரண்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே முதல் உதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரை நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையில் உள்ள கண் மருத்துவமனை, சரத்குமாரின் கண்ணை சோதித்துவிட்டு, அவர் கண்ணில் உள்ள கில்ட் பேப்பரை அகற்றியது. பிறகு கண்ணுக்கு சிகிச்சை அளித்தோடு, பேட்டேஜும் போட்டனர்.
இதுகுறித்து பேசிய சரத்குமார், கண்ணில் கில்ட் பேப்பர் விழுந்ததால் எரிச்சலும், வலியும் இருந்தது. உடனே அகற்றப்பட்டதால் தற்போது வலி குறைந்துவிட்டது. டாக்டர்கள் 8 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் என்றுசொல்லிவிட்டு தென்காசிக்கு புறப்பட்டார்.
labels:sarathkumar,paper,
No comments:
Post a Comment