*புதுச்சேரி கல்விஅமைச்சராக இருப்பவர் கல்யாணசுந்தரம். இவர், கடந்த செப்டம்பர் 29ம் தேதியன்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்உள்ள தாகூர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 10ம் வகுப்பு தனித் தேர்வின்போது ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. * மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அமைச்சர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட மூன்று பேர் மீது, எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
* அக்டோபர் 11ம் தேதி மற்றும் 18ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென, குற்றப்பிரிவு போலீசார், இரண்டு முறை சம்மன் வழங்கியும் அவர் ஆஜராகவில்லை. அமைச்சர் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட், அமைச்சரை கைது செய்ய தடை விதித்தது. இதற்கிடையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் சார்பில், அக்., 18ம் தேதி, அமைச்சர், போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக, திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். *மாஜிஸ்திரேட் பிரகாஷ், நவ., 2ம் தேதி அமைச்சர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, *திண்டிவனத்திலுள்ள முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2ம் தேதி நேரில் ஆஜரானார்.
labels:pondy,ஐகோர்ட், விழுப்புரம்,
No comments:
Post a Comment