HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday, 17 November 2011

பெட்ரோல் உருவாக்க ப்ளாஸ்டிக் போதும்?


பிளாஸ்டிக்கை கேúஸாலைன், டீசல், அரோமேடிக்ஸ் ஆக மாற்ற முடியும். வீணாகக் கிடக்கும் பிளாஸ்டிக்கை பெட்ரோல் பொருள்களாக மாற்றும் இந்தத் தொழில்நுட்பம் நமது விஞ்ஞானிகளின் முக்கிய சாதனையாகும். பிளாஸ்டிக்கை பெட்ரோல் பொருளாக மாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த மட்டும் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டோம். இந்திய எரிவாயு ஆணையத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பெருமளவில் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்வது தொடர்பான பொருளாதார சாத்தியங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
"யூரோ 3 எரிவாயு வரையறை"களை பூர்த்தி செய்யும் விதத்தில் டீசல், கேúஸாலைன் ஆகியவற்றை உருவாக்க முடியும். இது இந்தத் தொழில்நுட்பத்தின் தன்னிகரற்ற அம்சமாகும். மேலும், எளிதாக கிரியாஊக்கிகளை மாற்றுவதன் மூலம் நேரடியாகவே கச்சாப்பொருள்களிலிருந்து மேலும் பல உபபொருள்களை உருவாக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெறப்படும் பொருள்களில் நச்சுத் தன்மை இருக்கவே இருக்காது; சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் உருவாக்காது. 100 சதவீதம் பெட்ரோல் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும்.

labels:plastic,petrol



No comments:

Post a Comment