நேற்று முன்தினம் இரவு சவுடேஸ்வரியை தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்கள். சவுடேஸ்வரியை திடீரென வீட்டுக்குள் திடீரென வந்த ஒரு பாம்பு கடித்துவிட்டது. அவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் சவுடேஸ்வரி அபாய கட்டத்தை தாண்டினார்.
இதற்கிடையே திருமண விழாவில் பங்கேற்பதற்காக தாராபுரம் பெரிய காளியம்மன் கோயிலில் உறவினர்கள் குவிந்தனர். இந்நிலையில், நேற்று காலை 6.15 முதல் 7.15 மணி வரை முகூர்த்தநேரம் என்பதால், மருத்துவமனைக்கே சென்று திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவெடுத்தனர். உறவினர்கள் புடைசூழ மணமகன் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சவுடேஸ்வரி கழுத்தில் அவர் தாலி கட்டினார்.
labels:திருப்பூர், தாராபுரம், கரூர்,
No comments:
Post a Comment