பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறகோரி 24-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார்.
அண்மையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது. அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகங்களும், ஆவின் பால் நிறுவனமும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அவை முடங்கும் நிலையில் உள்ளது என்பதாலும் இந்த கட்டண உயர்வை மேற்கொண்டதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுகிறார்.
எந்த அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்களை கண்டு அவற்றை சீர்படுத்த வேண்டும் என்று முதல்வர் அக்கறை கொள்ளுகிறாரோ, அதே அளவுக்கு ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை செலவுகளை சரிக்கட்ட முடியாமல் திண்டாடும் அந்த மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசின் இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24.11.2011 வியாழக் கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தே.மு.தி.க. சார்பில் எனது தலைமையில் சென்னையில் கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை நிலையத்திலும்,
இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
labels:VIJAYAKANTH,MILK,MINISTOR,JEYALALITHA,CHENNAI.
No comments:
Post a Comment