பார்லிமென்ட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. டிசம்பர் மாதம்21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தின் முதல் நாளான நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் நடப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சமாக 25 லட்சரூபாய் செலவிடப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சிகள் நடத்திய அமளியால் நேற்று மட்டும் நான்கு மணிநேரம் அவை ஒத்திவைக்கப் பட்டது. இதன் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
labels:பார்லிமென்ட் ,சிதம்பரம்,
No comments:
Post a Comment