. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன் 41, இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். விஸ்வநாதன் கன்னியாகுமரிமாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி.,அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து பின்னர் அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்றுவருவார்.
கடந்த 10ம்தேதி இவர் காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில் ஒரு கார் மோதியது. இதில் காயமுற்றவர் நெல்லையில் 3 நாட்கள் சிகிச்சையில் இருந்து பின்னர் இறந்துபோனார். எனவே போலீசார் வாகனவிபத்தில் மரணம் என வழக்கு பதிவு செய்தனர். ஆனால் விஸ்வநாதன் இறப்பில் சந்தேகம் இருந்துவந்தது.
விசாரணையில் அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் 35, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் அதனை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து ஆதிலட்சுமி தெரிவித்தவுடன், குமார் ஏற்பாட்டில் காரை மோதி விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் விஸ்வநாதனின் மனைவி ஆதிலட்சுமி, காதலன் குமார் , உடந்தையாக இருந்த முத்துப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த ராஜ் என்பவரை தேடிவருகின்றனர்.
ஆதிலட்சுமி வாக்குமூலத்தில் கூறுகையில், கணவர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். எனது இரண்டு மகள்களை பள்ளியில் ஆட்டோவில் கொண்டு விட குமார் வருவார். அப்போது பழக்கம் ஏற்பட்டது. கணவர் தெரிந்து இதனை கண்டித்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதற்காக கார் வாங்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன் என தெரிவித்துள்ளார். அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
labels: auto.
No comments:
Post a Comment