HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday, 14 November 2011

நான் இன்னும் பள்ளி மாணவன்தான் பா!!!

கு.ஞானசம்பந்தனும் நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். எனக்கு ஒரு சுயநலம் உண்டு. நன்கு கற்றறிந்தவர்கள், விஷய ஞானம் உள்ளவர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் 


மறைந்த எழுத்தாளர் சுஜாதாதான் எனக்கு ஞானசம்பந்தனை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் அடிக்கடி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். நேரில் சந்திக்க இயலாதபோது தொலைபேசி வாயிலாகவும் இந்தப் பேச்சு தொடர்ந்திருக்கிறது.


ஆரம்ப காலத்தில் நடிக்கும்போது கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அதைத் தெரிந்துகொண்டால் நீ பெரிய நடிகனாகி விடுவாய் என அவரும் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.


மறைந்த நடிகர் வி.கே.ராமசாமியை எடுத்துக்கொண்டால் அவர் கைகளை ஆட்டாமலேயே நடித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். நாகேஷை எடுத்துக்கொண்டால் அவர் தனது உடல் மொழியிலேயே சிரிக்க வைத்துவிடுவார். 

ஆத்திகம், நாத்திகம் பேசும் அனைவரிடமும் நான் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசும்போது இரண்டு சாராரிடமிருந்தும் எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழக்கையில் நடித்ததில்லை என்றார் கமல்ஹாசன்.




labels:kamal,actors,sujatha,

No comments:

Post a Comment