HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday, 5 November 2011

3.88 கோடி மொபைல் போன்கள்,, 21,73,323 கார் மற்றும் ஜீப்....

நகரில் மொபைல் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரின் மொத்த மக்கள் தொகை 1.68 கோடி. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி மொபைல் போன்களுக்கு புதிதாக இணைப்பு தரப்பட்டுள்ளது. 2009 - 10 ம் ஆண்டு மொத்தம் 2.82 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இப்போது சுமார் 3.88 கோடி மொபைல் போன்கள் நகர மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 

நாட்டிலேயே டெல்லியில் வசிப்பவர்கள்தான் அதிகமாக செல்போன்களை பயன்படுத்துகின்றன்றர் என்பது தெளிவாகிறது. நாட்டில் மொத்தம் 85 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் லேண்ட் போன்களின் பயன்பாடு எப்போதும்போல ஒரே சீராக இருக்கிறது. 2009-10ம் ஆண்டுகளில்  நகரில் மொத்தம் 27.10 லட்சம் இணைப்புக்கள் இருந்தன. அது 2010-11 ம் ஆண்டில் 28.38 லட்சமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் மொத்தம் 5 லட்சம் வாகனங்கள் கடந்த ஆண்டு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து நாட்டின் மொத்த வாகனங்கள் எண்ணிக்கை 69,32,706 ஆக உயர்ந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி டெல்லியில் மட்டும் சுமார்  21,73,323 கார் மற்றும் ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




labels:cellphone,car,jeep,sales,delhi,

No comments:

Post a Comment