HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 29 November 2011

பெட்ரோல் விலை குறைப்பு!!


பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு   ஏற்ப எண்ணை   நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணை  விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்தன.
 
இம் மாதம்  16-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.22வரை விலை  குறைக்கப்பட்டது. இந்த விலை  குறைப்புக்கு பிறகு டெல்லியில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.66.42-க்கு விற்கப்படுகிறது.
 
இந்நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் கடந்த வாரம் கூடி இதுபற்றி   முடிவு  எடுத்தனர். விலை  குறைப்பு முடிவு இன்று நள்ளிரவு   முதல் அமலுக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை குறையும் என்று கூறப்படுகிறது. அத்துடன்  பெட்ரோல் மீதான வரியும் லிட்டருக்கு ரூ.1.02 குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

labels:petrol,delhi.

No comments:

Post a Comment