திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான சிரஞ்சீவி நேற்று திருப்பதியில் உள்ள சீந்தலசேணு பகுதியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு வந்து சிரஞ்சீவியை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் குடிநீர், கழிவுநீர், இடுகாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்காமல் சிரஞ்சீவி இங்கிருந்து போகக்கூடாது என்று கோஷம் போட்டனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சிரஞ்சீவி காரில் ஏறி அங்கிருந்து திருப்பதி மலைக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறும் போது, திருப்பதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை, இடுகாடு பிரச்சினை போன்றவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

labels:சிரஞ்சீவி,திருப்பதி,
No comments:
Post a Comment