80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் நவரத்தின கற்கள் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.
இதனை 30 நகைக் கலைஞர்கள், 14 தொழில்நுட்ப கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இந்த கார் முதன் முதலாக ஈரோட்டுக்கு பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் அறிமுக விழா ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஈஸ்வர மூர்த்தி மகாலில் நடந்தது. இதில் வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் தங்க ஆபரண கார் ஜொலித்தது.
இந்த கார் வருகிற 5-ந்தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த காரை பார்வையிட பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தற்போது தங்கம் விற்கும் விலையினை மனதில் நினைத்து அந்த தங்க காரினை ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த நகைக்கடை நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே பெரிய தங்க வளையலை தயாரித்து பெண்களை உச் கொட்ட வைத்தது.
labels:gold,car.nanocar,
No comments:
Post a Comment