பிரஹலாதன், "பகவான் நாராயணன் தூணிலும் இருக்கிறான்" என்று கூறினான். அவன் அப்படி சொன்னதும் ஹிரண்யன் தூணை உதைத்தான். நரசிம்மமூர்த்தி உக்கிரமாக வெளிப்பட்டார்.
ஆனால் நரசிம்மர், ஹிரண்யனை உடனே ஒன்றும் செய்யவில்லை. ஹிரண்யன் தன் கதையால் நரசிம்மரை தாக்கினான். அதை பகவான் பொறுத்துக்கொண்டார். ஏனென்றால் அப்போது மாலை நேரம். அந்நேரத்தில் ஹிரண்யனைக் கொல்ல முடியாது.
ஹிரண்யன் பெற்ற வரத்தின்படி பகலிலோ, இரவிலோ அவனைக் கொல்லக் கூடாது. எனவே சூ¡¢யன் அஸ்தமிக்கும் வரையில் நரசிம்மர் சுற்றிச் சுற்றி வந்து ஹிரண்யனுக்கு வளைந்து கொடுத்தார். அதைக்கண்ட ஹிரண்யன் நரசிம்மரைச் சக்தியற்றவர் என்றெண்ணி மேலும் மேலும் கதையால் தாக்கினான்.
இதனால் வேதனையுற்ற பிரஹலாதன் கண்ணீர் பெருக, "பிரபோ! என்னை மன்னியுங்கள். நீங்கள் தூணில் இருக்கிறீர்கள் என்று தொ¢யாமல் சொல்லிவிட்டேன். நீங்கள் இப்படியெல்லாம் துன்பப்படுவதற்கு நான்தான் காரணம்" என்று கதறி அழுதான்.
நரசிம்மர் புன்சி¡¢ப்புடன், "பிரஹலாதா! நான் பட்ட அடிகள் மிகவும் குறைவானவை. நீ என் நாமத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக எத்தனை கொடிய தண்டனைகளை அனுபவித்தாய்! அதற்கு நான் தானே காரணம்? அதற்கு பதிலாக நான் உனக்கு எதைக் கொடுத்தாலும் அது உன் துன்பத்திற்கு ஈடாகாது. அதனால்தான் இப்போது நானும் பதிலுக்கு அடிவாங்கி ஆறுதல் அடைகிறேன்" என்று கூறினார்.
பிறகு நரசிம்மர் ஹிரண்யனை வதைத்தார்.
பிரஹலாதனின் பக்தி தூய்மையானது, பிரதி பலன் எதையும் எதிர்பாராதது. எனவேதான் அந்தப் பக்தி பகவானையே கடனாளியாக்கிவிட்டது.
tag:kadayul,
No comments:
Post a Comment