இவர் கடந்த 15 தினங்களுக்குமுன்பு காசிபாளையம் நகராட்சியில் நிதி தணிக்கைக்காக சென்றார். அப்போது அவர் அங்கு செயல் அலுவலராக இருந்த பழனிச்சாமியை அழைத்து 2010-11-ம் ஆண்டின் நிதி தணிக்கையில் குளறுபடி உள்ளது என்றும், இதை மறைக்க வேண்டுமென்றால் எனக்கு ரூ.4 லட்சம் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.
பின்னர் அந்த லஞ்ச தொகை ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது. அதில் முன்பணமாக ரூ.1 லட்சத்தை நேற்று இரவு 8 மணிக்கு சித்தோடு 4 ரோடு சந்திப்பில் கொண்டு வந்து தருமாறு மனோகரன் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி தரப்பு ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் பணத்தை காசிபாளையம் நகராட்சி கிளார்க் விஸ்வநாதனிடம் கொடுத்து அனுப்பி அதை மனோகரனிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர். அவர் நேராக சென்று மனோகரனிடம் பணத்தை கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
No comments:
Post a Comment