ஆந்திராவின் கம்மாம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் இது போன்ற காய்ச்சலால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரருவர் வீதம் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 20 வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான எலிசா சோதனை செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. அக்டோபர் 20 ம் தேதிக்கு மேல் 10 நாட்களில் சுமார் 25க்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் எலிசா சோதனை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment