HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 8 May 2012

செல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு!!!


                                                                       2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கான குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தது. கடந்த 2010-ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி மட்டும்தான். ஆனால், 
         
                                                           டிராய் அமைப்பின் பரிந்துரை மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 7 மடங்கு அதிகமாக அதாவது ரூ.7 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
                                                             இந்நிலையில் வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பின் சிபாரிசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

                                                ஏர்டெல்,  வோடபோன்,  ஐடியா,   செல்லுலார்,   யூனினார், வீடியோகான் ஆகிய செல்போன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நேற்று டெல்லியில் மத்திய தொலை தொடர்பு மந்திரி கபில் சிபல், தொலை தொடர்புத்துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரை சந்தித்து பேசினர். தொலை தொடர்பு ஆணையம் செய்துள்ள பரிந்துரைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
 
                                         தொலை தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் படுத்தினால், சில பகுதிகளில் செல்போன் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மந்திரி கபில் சிபலிடம் எச்சரிக்கை விடுத்தோம் என்று ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கபூர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
 
                                          
labels:cellphone,tele services,sanjai kapoor,

No comments:

Post a Comment