HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 19 May 2012

பில்லா-2 டிரைலர் ரசிகர்கள் இடையே பெரும்.....

                                            
                                          அஜித்தின் பில்லா-2 படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஆரம்பித்த செய்தி இப்போது ஜூன் வரை தள்ளிபோய் இருக்கிறது. ஆனால் அதுவும் உறுதிசெய்யப்படாத தகவல் தான். அஜித்தின் பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. 


                                            இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டனும், புரூனா அப்துல்லாவும் நடித்துள்ளனர். சக்ரி‌டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. 

                                            இந்நிலையில் வருகிற ஜூன் 8ம் தேதி பில்லா-2 ரிலீஸ் ஆக இருப்பதாக அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவும் உறுதிப்படுத்தடாத தகவல் தான். பில்லா-2 சென்சார் குழுவுக்கு சென்று வந்த பின்னரே இப்ப‌டத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

                                        
   இதனிடையே பில்லா-2 படத்தின் ஆடியோ ரிலீஸ்க்கு ஒரு விழா கூட எடுத்து நடத்தாமல் அந்தந்த கடைகளில் நேரடியாக ஆடியோவை பெறும்படி செய்து இருந்தனர் படக்குழுவினர். 


                                           ஆனால் படத்தின் டிரைலரை ஒரு பிரம்மாண்ட விழாவில் வைத்து வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம் பில்லா குழுவினர். ஏற்கனவே தற்போது வெளியாகி இருக்கும் பில்லா-2 டிரைலர் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


                                      ஆனால் அதைக் காட்டிலும் இப்ப‌ோது வெளியாக இருக்கும் டிரைலர் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.


labels:billa2,ajith,

No comments:

Post a Comment