HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 22 May 2012

ஆண்கள் பருவமடையும் வயதில்... மார்பக வளர்ச்சியில்...பெரியதான....


                                                             வெளிப்புறத் தோற்றத்திற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பருவ வயதில் உள்ள ஆண்களிலிருந்து முதியோர் வரை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் வருந்துகிற பெரிய பிரச்சினை அதீத மார்பக வளர்ச்சி ஆகும்.


                                                   வழக்கமான மார்பகத்தைக் காட்டிலும் சற்றே பெரிதான மார்பகங்கள் உடைய ஆண்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்நிலைமை நீடிப்பது அவர்களது மகிழ்ச்சியான வாழ்வைத் தொலைத்துவிட நேரிடும். 


                                                பெரியதான மார்பக வளர்ச்சியில் உடல் ஆரோக்கியக் குறைவு  ஏற்படாது என்றாலும் மனரீதியான பாதிப்புகள்  ஏற்படும்.
                                       
                                               நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் மேலாடையின்றி நடமாட முடியாது. வீட்டிற்குள்ளேயும் கூட சட்டை அணியாமல் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. அதிகப்படியாக கூச்ச உணர்வு, தன்னம்பிக்கைக் குறைவு ஏற்படும்.


                                          பெரிய மார்பகம் பெண்களுக்குத் தான்  அழகாக இருக்கும். மார்பகத்தைப் பெரிதாக்கிக் கொள்ள நடிகைகள் சத்திர சிகிச்சை செய்து கொள்வதும், ஊசி மூலம் மார்பகத்தைப் பெரிதாக்குவதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆண்களுக்கு அது பெரிய ஆபத்தை  உண்டாக்கும்.
fat_man_

                        ஆண்கள் பருவமடையும் வயதில் ஹோர்மோன்களுக்கிடையில் ஏற்படும் குழப்பத்தினால் அதிகப்படியான மார்பக வளர்ச்சி ஏற்படும்.
"ஒபிசிட்டி'எனப்படும் அதிக எடை உள்ளவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படும்.
                        உடற்பயிற்சி மையங்களுக்குச் சென்று உடலை வடிவமைக்க முற்படுவோர் பயன்படுத்தும் ஊக்க மருந்துகளினால் இப் பிரச்சினை ஏற்படும்.
                    
                  50 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களினாலும் இக்குறைபாடு  ஏற்படலாம்.
                       
                    மார்பக வளர்ச்சி வந்தபிறகு எதுவும் செய்யமுடியாது. சிகிச்சையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும். 

                  சிறு துளை மூலமாக செய்யப்படும் இவ்வகை மருத்துவ சிகிச்சையில் பக்க விளைவுகள் எதுவுமில்லை. மருத்துவமனையில் ஒரு நாள்கூட தங்க வேண்டியதில்லை. சிகிச்சை மேற்கொண்ட இரண்டாம் நாளே பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்குச் சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.
வளர்ச்சியைத் தவிர்க்க ஏதாவது உணவு வழிமுறைகள் உண்டா ?


                     உணவுக் கட்டுப்பாடு எதுவுமில்லை. கொலஸ்ட்ரோல் அதிகம் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
சிகிச்சைக்குப் பிறகு உணவுக் கட்டுப்பாடு ?
எதுவுமில்லை. எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா ?
செலவு மிகவும் குறைவுதான்.

No comments:

Post a Comment