HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 22 May 2012

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு......பிளஸ் 2 தேர்வு முடிவு.....

    
                                            தமிழகத்தில் இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிகளில் வெளியாகாததால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                 புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாக முதன்மை கல்வி அலுவலருக்கு தற்போது வரை தேர்வு முடிவுகள் விவரமோ, மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் விவரமோ அளிக்கப்படவில்லை.
                     
                                  பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகள் அளிக்கப்படாததால், கிராமப்புற மாணவ, மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள பள்ளிகளுக்கு வந்திருந்தனர். ஆனால் அங்கு தேர்வு முடிவுகள் ஒட்டப்படாமல் இருந்தால் அவர்கள் நகரங்களுக்குச் சென்று தேர்வு முடிவுகளைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டது.
              
                          மேலும், தமிழக அரசின் இணையதளங்களில், தேர்வு எண் மட்டுமல்லாமல், பிறந்த தேதியை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.  இது இன்னும் நிலைமையை சிக்கலாக்கியது. வெறும் தேர்வு எண்களை வைத்துக் கொண்டு பெற்றோரும், 


  
                         உறவினர்களும் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இணையதளம் மூலமாக மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் கிராமப்புறத்தில் பெற்றோரும், மாணவர்களும் அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


                       இதுவரை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளின் விவரம் தெரியாததால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் அதிக பரபரப்பு காணப்படுகிறது.


labels:புதுக்கோட்டை, கரூர், திருச்சி. 

No comments:

Post a Comment