HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 May 2012

ரேஷன் பொருட்கள் விநியோகம்.......ஆன்லைனில் புதுப்பித்தவருக்கு.....

                         தமிழகத்தில் 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றிற்கு மாநிலம் முழுவதுமுள்ள 30 ஆயிரத்து 924 ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
                        இந்த ரேஷன் கார்டுகளில் திருத்தம், சிலிண்டர்கள் எண்ணிக்கை, பெயர் நீக்கல், சேர்த்தல், பிற தகவல்கள் குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் தகவல் தெரிவித்து புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. ஜனவரி மாதம் தொடங்கிய இந்தப் பணி பிப்ரவரி 28ம் தேதி வரை நடந்தது.

                       புதுப்பிக்காத ரேஷன் கார்டுகளை மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பிக்க தமிழக உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது. இந்த ஒரு மாதத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 285 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டன. 
                    
                     இது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.ரேஷன் கடைகளில் ஜனவரி மாதத்தில் இருந்து புதுப்பித்த ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொது விநியோக பொருட்கள் வழங்கப்பட்டன.
                    
                       புதுப்பிக்காத கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆன்லைனில் புதுப்பித்த ரேஷன் கார்டுகளுக்கு ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களாக பொருட்கள் கிடைக்கவில்லை. 4 மாதங்களாக பொருட்கள் இல்லாமல் தவித்த ரேஷன் கார்டுகளுக்கு இந்த மாதம் முதல் பொது விநியோக பொருட்கள் வழங்க உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. 
           
                       இதற்கான பொருட்கள் ஒதுக்கீடும் நடப்பு மாதத்திற்கு ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


labels:online, card.

No comments:

Post a Comment