HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 May 2012

பாண்டிராஜ் தயாரிப்பாளர்.......4 பசுமாடுகளை மே‌ய்ப்பேனே தவிர.......

                                                          எனக்கு ஒரு கஷ்டம் வந்தால் சொந்த ஊருக்கும் போய் 4 பசுமாடுகளை மேய்த்து பிழைப்‌பேனே தவிர, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சமாட்டேன் என்று டைரக்டரும், தயாரிப்பாளருமான பாண்டிராஜ் கூறியுள்ளார். பசங்க படம் மூலம் பிரபலமானவர் டைரக்டர் பாண்டிராஜ். 
                                                            சமீபத்தில் மெரினா என்ற படத்தை இயக்கியும், தயாரிக்கவும் செய்தார். இந்நிலையில் படத்தை தான்தான் தயாரித்ததாகவும், ஆனால் தன்னை ஏமாற்றி அப்படத்தை தயாரித்ததாக பாண்டிராஜ் விளம்பரபடுத்தி கொண்டதாக பாலமுருகன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகாரை பாண்டிராஜ் மறுத்தார்.

                                     பசங்க புரொடக்ஷ்ன்ஸ் என்ற எனது நிறுவனம் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் ‌எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னிடம் மேனேஜராக பணியாற்றிய சாம்பசிவம் என்னிடம் சம்பளம் வாங்கி கொண்டு, நான் கொடுத்த உரிமையை தவறாக பயன்படுத்தி எனது கம்பெனியில் உள்ள வவுச்சர் பேட்களை திருடி, எனது கம்பெனி பெயரிலேயே பொய்யான கணக்குகளை தயார் செய்து இன்று பாண்டிராஜ் தயாரிப்பாளர் இல்லை என்று பொய் வழக்கு போட்டுள்ளார். 
                                          ரூ.12 லட்சம் போட்டவர் தயாரிப்பாளர் என்றால் கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்தவனை என்னவென்று சொல்லுவது. பதினைந்து லட்சம் கோர்ட்டு மூலமே வழங்கி விட்டேன். மேலும் பல லட்சங்களை பறிப்பதற்காக பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்புகின்றனர்.

                                         என் மீது குற்றம் சாட்டும் ஆர். பாலமுருகன் மீது பெரம்பலூரில் நிலமோசடி வழக்கு உள்ளது. பி. சாம்பவசிவம் மீது செக் மோசடி வழக்கு உள்ளது. இவர்கள் என் மீது மோசடி வழக்கு போட்டுள்ளனர். பணம் வேண்டுமென்றால் இன்று பல கோடிகளை என்னால் அட்வான்ஸாக மட்டுமே பெற்றிருக்க முடியும்.
                                          யாரையும் பண மோசடி செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஆண்டவன் எனக்க நிறையவே கொடுத்திருக்கிறான்.
                                        அப்படி ஒரு நிலை வந்தால் எனது சொந்த கிராமமான விராச்சிலைக்கே சென்று 4 பசுமாடுகளை வாங்கி மேய்த்து பிழைப்பேனே தவிர அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி குடிக்க ஆசைப்படமாட்டேன். 

                                         தினமும் எதாவது செய்தி கொடுத்தால் பாண்டிராஜ் பயந்து விடுவான், அவனை மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். என்னைப் பற்றியும், என் நேர்மையை பற்றியும் என் குடும்பத்தினருக்கும், என் நண்பர்களுக்கும் தெரியும்.
                                        பசங்க படத்திற்கா‌க தேசிய விருது பெற்றது முதல் இன்று வரை எனது படைப்புகளுக்கும், எனக்கு பேராதரவை வழங்கி வரும் என் நலம் விரும்பிகளுக்கும் நடந்த உண்மைகளை தெரியப்படுத்தவே இந்த தன்னிலை விளக்கத்தை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்


labels:pondiyaraj,pasanga,

No comments:

Post a Comment