HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 22 May 2012

இங்கிலாந்து அணி வெற்றி......



                               மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து லோர்ட்ஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மேற்கிந்தியா 243 ஓட்டங்களும்  இங்கிலாந்து 398 ஓட்டங்களும் எடுத்தன.


                            இதன் பிறகு இரண்டாவது இனிங்ஸில் ஆடிய மேற்கிந்தியா 4 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 345 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
 
                            191 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 4 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 10 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 5 ஆவது நாளான திங்கட்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை  இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.  


                         மேலதிகமாக 134 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இணைந்த அலஸ்ரெயர் குக், இயன் பெல் இருவரும் மிகவும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை மீட்டனர். இந்த இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 132 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். 



                             இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை எடுத்து  வெற்றி பெற்றது. அலஸ்ரெயர் குக் 79 ஓட்டங்களும், இயல் பெல் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களும் எடுத்தனர். 
பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி கடுமையான அழுத்தத்தை கொடுத்த  கேமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், கெவின் பீற்றர்சனின் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷன்னொன் கப்ரியல் ஒரு விக்கெட்டையும் , டெரன் சமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 


                                  இரு இனிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் ஸ்ருவர்ட் புரோட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்குமிடையிலான அடுத்த டெஸ்ட் 25 ஆம் திகதி தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.


labels:இங்கிலாந்து, டெஸ்ட்,

No comments:

Post a Comment