HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 18 May 2012

சென்னை சூப்பர் கிங்ஸூக்கு வாய்ப்பு......


                                  
                                                    ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


                                                     இந்த ஆட்டத்தில் வென்று இருந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் தக்கவைத்திருக்க முடியும்.
                    
                                                      முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெக்கான் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


                                                     ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் திராவிட், ரஹானே ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.




                                                 இரண்டாவது ஓவரில் ரஹானே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன் 13 ரன்களே எடுத்தார். பின்னி 7 ரன்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து டிராவிட் 39 ரன்களுடன் வெளியேறினார்.
                                              
                                            பின்வரிசையிலும் எந்த வீரரும் குறிப்பிடும் வகையில் ரன் சேர்க்கவில்லை. ஷா 28 ரன்களும், மெனேரியா 20 ரன்களும் எடுத்தனர். பேட்டிங் சரியாக அமையாததால் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுக்க முடிந்தது. டெக்கான் அணியின் ஸ்டெயின், பிரதாப் சிங், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
    நல்ல தொடக்கம்:                                         
                                       127 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய டெக்கான் அணிக்கு ஏ.ரெட்டி, ஷீகர் தவாண் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். 8.3 ஓவர்களில் ஸ்கோர் 63 ஆக இருந்தபோது தவாண் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ரெட்டி 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
                                  
                                      பின்னர் வந்த டுமினி 24 ரன்கள் எடுத்தார். கேட்பன் ஒயிட் 1 ரன்னில் வெளியேறினார். எனினும் வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைவாகவே இருந்தது. 18.4 ஓவர்களில் டெக்கான் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. பார்தீவ் படேல், ஆசிஸ் ரெட்டி ஆகியோர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

           
                       4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்த டெக்கான் பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.



சென்னை சூப்பர் கிங்ஸூக்கு வாய்ப்பு?
                                    இப்போட்டியில் தோல்வியடைந்ததால் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
                
                    அதே நேரத்தில் ராஜஸ்தான் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு இப்போதும் உள்ளது. சென்னை அடுத்த சுற்றுக்குச் செல்ல ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகள்தான் போட்டியாக இருந்தன. 


                     இப்போது ராஜஸ்தான் தோற்றுவிட்டதால் அடுத்த சுற்றில் நுழைய சென்னைக்கு சவாலாக இருந்த அணிகளில் ஒன்று வீழ்ந்துவிட்டது.
அடுத்து வரும் ஆட்டங்களில் பஞ்சாப் அணி டெல்லியிடமும், பெங்களூர் அணி டெக்கானிடமும் தோல்வியடைந்தால் சென்னை கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.


labels:ராஜஸ்தான்,டெக்கான் ,பெங்களூர், விக்கெட்.

No comments:

Post a Comment