HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 24 May 2012

2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் ....சர்க்கரை வியாதி


                                
போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.
                சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

            இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம்.

           பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது.
             ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.
          
  சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது.
                 இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

No comments:

Post a Comment