HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 22 May 2012

இறுக்கும் ஜீன்களால் ஏற்படும் ஆபத்துகள்.......

                                       tight_jeans                 பெண்களைப் பொறுத்தவரை இறுக்கமாக ஜீன்ஸ்களை அணிவது பாதுகாப்பானது என்று இன்றுவரை கருதப்பட்டு வந்தபோதும் அது நோய்களை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "வுமன்ஸ் ஹெல்த்' என்னும் மருத்துவ சஞ்சிகை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அச்சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களைப் பார்ப்போம். 

 
                                           இளவயது ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது, சில நேரங்களில் "இவர்களுக்கு மூச்சு முட்டுமே' என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு இறுக்கமாக போட்டுக்கொண்டுஎப்படி வாகனங்களில் ஏறி இறங்குவார்கள்? மாடிப்படிகளில் ஏறுவார்கள்? என்றெல்லாம் கேட்கத்தான் தோன்றும்.
                     
                                      ஆனால், ஜீன்ஸ் கன்னியர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அது அவர்கள் நாகரீகம். அது அவர்கள் உலகம்...! அது உடலை இறுக்கினால், தாங்களும் நாகரீகத்தோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும் என்றுகூறி சரும நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு உடை இருக்கிறதா? 

                                     இல்லையா என்று தேடும் அளவுக்கு நாகரீகத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்.  தோல் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கலக்கும் பெண்களும் அதற்கு "ஸ்கின்னி' என்றொரு பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.
       
                                    இப்போது ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள். அதனை விரும்பி அணிய என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்டால்.
"தன்னம்பிக்கை தருவதாக' சிலர் சொல்கிறார்கள்.
       
                                   சௌகரியமான உடையாக இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள்.
"அழகு அதிகரிக்கிறது... எடுப்பாக இருக்கிறது' என்பவர்களும் உண்டு.
"எங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான உடை' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
 
                                   இப்படி எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஜீன்ஸ்களை அணிந்தாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.
               
                                 தோழியர் குழு ஒன்று பஸ், ரயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது. பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் ஒருவருக்கு காலில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. பயணத்தில் ஏற்பட்ட அசௌகரியத்தால் அது ஏற்பட்டிருக்கும் என்று முதலில் அவள் நினைத்தாள். ஆனால், மறுநாள் வலி அதிகரித்துவிடவே, டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

                               பயணத்திற்கு சௌகரியமானது என்று கருதி இறுக்கமான ஜீன்ஸை அவள் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவிட்டாள். ஏற்கனவே அது உடலை இறுக்கிப்பிடித்திருக்க, அதற்கு மேல் இறுக்கிப்பிடிக்கும் பெல்ட்டும் அணிந்திருக்கிறாள். அது அவளுக்கு "மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.

                               பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதி வழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்ஸும் பெல்ட்டும் போட்டி போட்டு இறுக்கியது கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலியும் அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங்களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால் சத்திர சிகிச்சை தேவைப்படும்.

     
                                 நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்புப் பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால் அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

                                 ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்றுப்படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறுது. அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment