HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 30 October 2011

டாக்டரிடம் கேட்க 10 கேள்விகள்?குழந்தையின்மை பற்றி

   1) மருத்துவ பரிசோதனைப்படி எனக்கு என்ன பிரச்னை, இது குழந்தையின்மைக்கு எப்படி காரணமாகிறது? இந்த நிலை மேலும் மோசமடையுமா, மேம்படுமா அல்லது இப்படியே நீடிக்குமா?
2)நான் செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின்மைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால், வேறு என்ன பரிசோதனை செய்ய வேண்டும்? இத்தகைய பரிசோதனையால் ஏதாவது பிரச்னை ஏற்படுமா? எனது வாழ்க்கைத் துணைவருக்கு ஏதாவது கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டுமா?
3)முதலில் எந்த மாதிரியான சிகிச்சையை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்? அது அறுவை சிகிச்சை அடிப்படையிலானதா அல்லது மருந்து அடிப்படையிலானதா? அல்லது இரண்டும் சேர்ந்ததா? இந்த சிகிச்சையில் உள்ள பிரச்னை என்ன?
4)உங்களுடைய மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற்றவர்களில் எத்தனை பேர் கருத்தரித்திருக்கிறார்கள்? (சில நேரங்களில் கருத்தரித்தாலும் அவை கலைந்து விட வாய்ப்பு உண்டு எனவே, கருத்தரித்ததைக் கூறுகிறாரா? அல்லது நல்ல நிலையில் குழந்தை பிறந்ததை கூறுகிறாரா என்பதை கவனியுங்கள்)
5) பழங்கால மருத்துவ முறைகளை ஏதேனும் உள்ளதா? நீங்கள் பரிந்துரைக்கும் வழக்கமான சிகிச்சை முறையுடன் இதை ஒப்பிட்டால் எது சிறந்தது?
6)பொதுவாக, அடுத்த சிகிச்சைக்கு செல்வதற்கு முன் நீங்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை எத்தனை தடவை முயற்சி செய்யலாம்?
7)என்னுடைய இப்போதைய வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா? 
8) கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று கருத்தரிக்கும் முறையை நீங்கள் பரிந்துரை செய்வீர்களா? அதற்கான வசதிகள் உங்கள் மருத்துவமனையில் உள்ளதா?
9) கருத்தரித்தல் சிகிச்சை எனக்கு எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
10) இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்? இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை என்னுடை மருத்துவ காப்பீடிலிருந்து கிளெய்ம் செய்ய முடியுமா?

No comments:

Post a Comment