
என் மகன் பாலமுருகனை (14), மாரிமுத்து என்பவர் ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கண்ணணூரில் உள்ள சிப்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து சென்றார். அதிக சம்பளம், சாப்பாடு அளிப்பதாக சொல்லி, முன்பணமாக ஸீ3 ஆயிரம் கொடுத்து மகனை கேரளாவுக்கு கூட்டி சென்றார். ஜூலை 13ல் திடீரென மாரிமுத்து, பாலமுருகனுடன் ஊருக்கு வந்தார். பாலமுருகன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. சிப்ஸ் கம்பெனியில் பாலமுருகனை கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். தூங்கவிடாமல் 24 மணி நேரம் வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். ஜூலை 5ல் தூங்கி கொண்டிருந்த அவனை எழுப்பி வேலை செய்ய சொல்லி அடித்துள்ளனர். கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை அவன் மீது ஊற்றியுள்ளனர். அவனை கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தேன்.
மனித தன்மையற்ற செயல்... புகார் கொடுத்துள்ள உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. தொடர்ந்து போராடுங்கள்..
ReplyDelete