HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 24 October 2011

முகப்பருவா!..உள்ளதா?

அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள். ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும்.
. அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்
சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர். இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல. காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.
முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.

1)சோற்றுக்கற்றாழை - 1 துண்டு
செஞ்சந்தனம் - 5 கிராம்
வெள்ளரிக்காய் - 2 துண்டு
சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.
காரட் - 2 துண்டு,பாதாம் பருப்பு - 2
2)தயிர் - 1/2 கப்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.

3)ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

4)பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

5)அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.

6)புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.

No comments:

Post a Comment