HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 24 October 2011

நள்ளிரவு 12 மணிக்கு மேல்...பூட்டை உடைத்து

                          அரியலூர் குமாரசாமி என்பவர் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த கடையை ஞாயிற்றுக்கிழமை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த கடையின் பூட்டை உடைத்த மர்ம மனிதர்கள் உள்ளே இருந்த ரூ.25ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

மேலும் அருகில் உள்ள அண்ணாதுரை என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து சென்று விட்டனர். மேலும் சிவலிங்கம் மருந்து கடையிலும் பணம் மற்றும் பொருட்கள் கொள் ளையடிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள ஒரு செல்போன் மற்றும் ஆடலரசன் என்பவரது ஜவுளி கடை ஆகியவைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் துணிகளையும் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
ஆடலரசனின் ஜவுளி கடையில் பூட்டை உடைத்தபோது சத்தம் கேட்டு அவர் வீட்டில் இருந்து எட்டி பார்த்தார். அப்போது 2 பேர் போலீஸ் போல காக்கிபேண்டும் மேலே மழை கோட்டு போட்டு கொண்டு கையில் டார்ச் லைட்டு மற்றும் லத்தியுடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் ஆடலரசனிடம் நாங்கள் போலீஸ் தீபாவளி திருடர்களை கண்காணிக்க சோதனை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனால் ஆடலரசன் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

இதன் பிறகு கொள்ளை நடந்து உள்ளது. எனவே போலீஸ் வேடத்தில் வந்து கொள்ளையர்கள் கைவரிசைகாட்டியது தெரியவந்துள்ளது. இந்த துணிகர கொள்ளை பற்றி கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment