HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 27 October 2011

ஒரே நாளில் ரூ.75 கோடிக்கு மேல் விற்பனை......

 ஒரே நாளில் 1,800 கார்களும், 9,100 மோட்டார் சைக்கிள்களும் விற்பனையாகி உள்ளது.

தென் மாநிலங்களில் தீபாவளியை போன்று, வடமாநிலங்களில் தனதேரஸ் என்ற பண்டிகை தீபாவளியின் போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ளவர்கள் தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவார்கள். இதன்காரணமாக தீபாவளிக்கு 4 நாள்கள் முன்னதாக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். தீபாவளிக்கு பிறகும் கடைகளில் கூட்டம் காணப்படும்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் 1,800 கார்களும், 9,100 பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மாருதி நிறுவனம் முதல் இடத்தை பிடித்தது. இது 750 கார்களை விற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் 350 கார்களையும், மஹிந்திரா மோட்டார்ஸ் 500 கார்களையும் விற்பனை செய்துள்ளன. கார்கள் விற்பனையினால் ஒரே நாளில் ரூ.70 கோடிக்கு மேல் விற்றுமுதல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே போன்று, தங்க நகை கடைகளும் ஒரே நாளில் ரூ.75 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளன. ரூ.20 கோடிக்கு தங்க நாணயங்களும்,ரூ.10 கோடிக்கு வெள்ளி நாணயங்களும் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு அன்றே அல்லது மறுநாளோ, வட இந்தியர்கள் லட்சுமி பூஜை செய்வார்கள். அதில் புதிதாக வாங்கப்பட்ட தங்க, வைர நகைகள், டாலர்கள், வெள்ளிப் பொருள்களை வைத்து வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்ததக்கது.

No comments:

Post a Comment